Ad Code

Responsive Advertisement

நாம் ஏன் LINUX பயன்படுத்த வேண்டும், Linuxன் நன்மைகள்

Banner for why linux?

நாம் ஏன் Linux பயன்படுத்த வேண்டும்?

Linux ஏன் பயன்படுத்த வேண்டும்? ஒரு macஅ விட windowsஅ விட Linux சிறப்பானதுனு சொல்ல காரணம் என்ன மற்றும் Linux மத்த OSஅ விட எப்புடி வித்யாசமானதுனு தாங்க பாக்க போறோம். 

1. Free & Open Source

Linux ஒரு free மற்றும் Open Source. இது ஒரு Proprietary Software கிடையாது. Proprietaryன அது ஏதோ ஒரு companyகு சொந்தமானதா இருக்கும். Linux எந்த companyக்கும் சொந்தமில்லை, யாருவேணாலும் Linux download பண்ணி freeஅ பயன்படுத்திக்க முடியும். 
Linux free மட்டுமில்லைங்க இது ஒரு Open Sourceகூட இதனோட source codeஅ நம்மலால பக்கமுடியும், அத நமக்கு பிடிச்சமாரி alter பண்ணி அத redistributeம் பண்ண முடியும்.      

2. Security & Privacy

Linuxஅ ரொம்பவுமே சிறப்பாக்குற அடுத்த விஷயம் என்னன்னா Security மற்றும் Privacy தாங்க. நம்ம எல்லாருக்கும் வெளிப்படையா தெரிஞ்ச விஷயம் தாங்க Windows எவ்ளோ சீக்கரம் Virusஆலா affect ஆகும்னு. Windows install பண்ணஉடனே நம்ம பண்ணற முதல் விஷயம் என்ன? அதுல ஒரு antivirus install பன்னுவோம்.   

Linux Security

அப்போ Linuxல virusஎ வராதுன்னு நான் சொல்லலைங்க, linuxல virus affect பண்ணறது ரொம்ப கம்மின்னு தாங்க சொல்லவரேன். Linuxல system code affect பண்ணற எந்த codeஅ இருந்தாலும் அத super userனால தான் பண்ண முடியும். Super user password பத்திரமா இருக்குற வரைக்கும் நம்ம Linux safe தாங்க.   

3. Stable

Linuxஅ சிறப்பாக்குற அடுத்த விஷயம் என்னனா அதோட Stability தாங்க. அம்மங்கா Linux ரொம்பவுமே Stable ஆனது, அதே மாரி அவ்ளோ சீக்கரம் crash ஆகாது. 

linux stability
Linux OS நம்ம first install பண்ணும்போது எந்த வேகத்துல run ஆச்சோ அதே வேகத்துல தான் 10 வருஷம் கழிச்சும் run ஆகும். அதுனாலதான் internetல run ஆகுற 90% server எல்லாம் linuxல தான் ரன் ஆகுது.

4. Compatibility

Linux எந்த விதமான Electronic Deviceலையும் நம்மால run பண்ணமுடியும். ஒவ்வொரு Windows Os வரும்போதும் நெரிய computer incompatible (பயன்படுத்த முடியாம போய்டும்) ஆயிடும். ஆனா Linux எவ்ளோ பழைய machineலயும் நம்மால run பண்ண முடியும். அதே மாதிரி Linuxஅ நம்மால சின்ன சின்ன deviceலயும் run பண்ணமுடியும்.      

5. Customisation

Linux Open Sourceனால அத நம்ம எப்புடி வேணாலும் customise பண்ணிக்கலாம். Linuxல நிறைய Desktop Environment இருக்கும் Gnome, KDE, Cinnamon, XFCEனு சொல்லிக்கிட்டே போகலாம். ஒரு உதாரணத்துக்கு சொல்லனும்னா Ubuntuல இருக்குற file manager எனக்கு பிடிக்கலைன்னா எனக்கு பிடிச்ச file managerஅ  என்னால install பண்ணி defaultஅ set பன்னிக்கமுடியும்.    

6. Software Availability

ஆரம்ப காலகட்டம் மாதிரி இல்லாம இப்போ பாதீங்கான Linuxல இல்லாத softwareஎ கிடையாது. அதுலயும் 95% free software தான் இருக்கும் அதுலயும் அதிகபட்சம் Open Sourceஅ தான் இருக்கும். Software install பண்ணறது ரொம்ப easyங்க. 
எல்ல Linuxலையும் Software Store இருக்கும் அதுல இருந்து easyஅ download  பண்ணிக்கலாம். அதிகபட்சம் எல்லாமே free மற்றும் open sourceஅ தாங்க  இருக்கும்.  

7. Update & Maintenance

உண்மையா சொல்ல போகணும்னா நம்ம எத்தனை பேரு ஒரு முக்கியமான விஷயம் செய்ய Laptop / System On பண்ணும்போது இந்த Screen பாத்து கோவப்பட்டுருக்கோம்.


ஆனா Linuxல அந்த problem எதும் இல்லைங்க software update பண்ணறது ஆகட்டும் / OS update பண்ணறது ஆகட்டும், அது பாட்டுக்கு backgroundல run ஆகிட்டு இருக்கும். அதிகபட்சம் நம்மகிட்ட restart பண்ண சொலிகேட்கும் அவ்ளோதாங்க.  

8. Community Support

Linuxகு Strong Online Community Support இருக்குங்க, அதுக்கு ஒரு முக்கியமான காரணம் என்னன்னா அதனோட Open Source capability தாங்க. நம்ம ஏதாச்சு ஒரு problemஒ இல்ல bugஒ face பன்னோம்னா அதே forumல சொன்னோம்னா அதுக்கான பதில் உங்களுக்கு உடனே கிடைச்சுரும், இதே windowsல ஒரு பிரிச்சனைனா அத windows technicianஆலா தான் தீர்க்க முடியும்.    

9. Terminal Interface

இது மட்டும் இல்லாம எனக்கு Linux புடிக்க முக்கியமான காரணம் என்னன்னா அதோட Terminal தாங்க. Linux Terminal ரொம்பவுமே powerful ஆனது ஆனா அத சுலபமா பயன் படுத்த முடுயும். அதோட Linux ரொம்ப fastஅனா OS, அதே போல நம்ம system resource கம்மியா பயன்படுத்தும். Resource கம்மியா பயன்படுத்தும் பொது battery lifeம் நல்ல இருக்கும்.


 


Post a Comment

0 Comments

Close Menu