Ad Code

Responsive Advertisement

Linux என்றால் என்ன? மற்றும் அதன் வரலாறு


Image of a Computer with Word Linux in it

Linux:

எல்லாருக்கும் வணக்கம் . இந்த postல நம்ம எதபத்தி பாக்க  போறோம்னா "LINUX", ஆமாங்க Linuxன என்ன, அதனோட வரலாறு என்ன, எங்கேயெல்லாம் Linux பயன்படுத்துறோம்னு தாங்க பாக்க போறோம்.

LINUX, ஒரு கம்ப்யூட்டர் படிக்குற student கிட்ட கேட்டா கூட அது அவருக்கு புரியாத புதிரா தாங்க இருக்கும். LINUX ஒரு Operating System (OS). நம்ம அன்றாடம் பயன்படுத்த கூடிய Windows, Macintosh மாதிரி தாங்க. 

“Operating Systemனா என்ன ?”

OSனா என்னன்னா, அது ஒரு platform மாதிரி, நம்மளோட Computerல இருக்குற Hardware (CPU, Memory, Keyboard, Mouse) மற்றும் நம்ம Software (Applications) எல்லாத்தையும் ஒன்னு சேர்க்குறது தான் OS ஓட வேலை. 

Linux வரலாறு :

Linus Torvad : Linux

1991ல Linus Torvald (லைன்ஸ் தோர்வால்ட்) ஆலா compile செய்யப்பட்டது தான் Linux. Linus, University of Helsinikiல படிச்சுட்டு இருக்கும்போது இத கட்டமைச்சாரு. Linux Kernal (மையம்) Unix அப்புடிங்குற OSஅ மையமா கொண்டது. 

Linux ஆரம்ப காலத்துல பாத்தோம்னா நம்ம அன்றாடம் பயன்படுத்த கூடிய software ஏதும் இல்லைங்க. Linus அப்போ இருந்த leading Software Engineersகூட சேந்து software உருவாக்கி அத ஒரு complete OSஅ 1991ல launch பண்ணனாரு. 

Linux எதுக்கு நம்ம பயன்படுத்தனும் ?

Windows மாறியோ இல்ல Macintosh மாறியோ linux ஒரு Proprietary OS கிடையாது. Proprietaryன அது ஒரு companyக்கு சொந்தமானதுனு அர்த்தம். Linux ஒரு free OS. Linux பயன்படுத்த நம்ம யார்கிட்டயும் பனம் குடுத்து Licence வாங்க வேண்டியது இல்லைங்க. 

இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா இது ஒரு Open Source Software. Open Sourceன நம்மலால Source Codeஅ பாக்க முடியும். Linuxல  நம்ம பாக்கறது மட்டும் இல்லாம அத நமக்கு புடுச்சா மாதிரி அத மாத்தி அத redistributeம் பன்ன முடியும்.  

Linux ரொம்பவுமே stable ஆனது அதேமாரி அவ்ளோ சீக்கரம் virus affect பண்ணாது. அத்தோட இது ரொம்பவுமே Light Weight ஆனது (Memory கம்மியா பிடிக்கும்) அதுனா ஒரு 10 வருஷம் பழைய computerல கூட எந்த பிரச்சனையும் இல்லாம run ஆகும்.

Linux எங்கயெல்லாம் பயன்படுத்த படுது?

Linux எல்ல இடத்துலயும் இருக்கு, நம்ம பயன்படுத்துற Smart Phones, Smart TV, SetTop Box, Fridge இந்த மாதிரி சின்ன applications  மட்டும் இல்லாம High Speed Computing தேவைபடகூடிய Serverல, Satellite Communicationல, Stock Exchange Dataல எல்லாம் Linux தான் பயன்படுத்து.  



Post a Comment

0 Comments

Close Menu